"மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்" - சென்னை மாநகராட்சி துணை மேயர்
சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமென சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
தனியார் கல்லூரி சார்பில் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி கலங்கரை விளக்கம் அருகே நடைபெற்றது.
அதனை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினா லூப் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Comments